×

தர்மபுரியில் சப்போட்டா வரத்து அதிகரிப்பு

தர்மபுரி, நவ.28: தர்மபுரி மாவட்டத்தில் சப்போட்டா விளைச்சல் அதிகரிப்பால், கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் சப்போட்டா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளயில் சப்போட்டா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சப்போட்டா அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. திருப்பத்தூர் பால் சப்போட்டா ரகம் வரத்து அதிகரித்துள்ளது. சப்போட்டாவில் புரதம், நார்சத்து, மாவு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது. ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைப்பதுடன், இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு தீர்வாக சப்போட்டா உள்ளது. இந்த ஆண்டு விளைச்சலும் நன்றாக உள்ளது. தர்மபுரி பஸ் ஸ்டாண்டை சுற்றியும், சித்தவீரப்ப செட்டிதெரு, சின்னசாமிநாயுடுதெரு, ஆறுமுக ஆசாரிதெரு, பென்னாகரம் ரோடு, முகமது அலி கிளப்ரோடு மற்றும் சந்தையிலுள்ள பழக்கடைகளிலும், சாலையோரம் தள்ளுவண்டிகளிலும் சப்போட்டா பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. சப்போட்டா ஒரு கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Dharmapuri ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்