×

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்ககோரி திக ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ. 28:  கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர்  பாதித்த பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை  மத்திய அரசு வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை அனைத்து கட்சி  பிரதிநிதிகளையும் இணைத்து கொண்டு வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே  நடத்த வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் திக சார்பில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார். பெரியார்  சுயமரியாதை பிரசார நிறுவன துணைத்தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். பொது  செயலாளர் ஜெயக்குமார், மண்டல தலைவர் ஜெயராமன், பட்டுக்கோட்டை மாவட்ட  தலைவர் சித்தார்த்தன், மாநில அமைப்பாளர் குணசேகரன், தஞ்சை மண்டல செயலாளர்  அய்யனார், தஞ்சை நகர செயலாளர் முருகேசன், திமுக நகர செயலாளர் நீலமேகம்,  மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்  சொக்காரவி, மமக மாநில துணை பொது செயலாளர் பாதுஷா பங்கேற்றனர். மாவட்ட  செயலாளர் அருணகிரி நன்றி கூறினார். ெடல்லி புறப்பட்ட விவசாயிகள்
டெல்லி நாடாளுமன்றம் முன்பு நடைபெறும் நெல் கொட்டும் போராட்டத்தில் பங்கேற்க புறப்படுவதற்கு முன் கும்பகோணத்தில் கரும்பு, நெற்கதிர்களுடன் விவசாயிகள் கோஷமிட்டனர்.

Tags : Demonstration ,districts ,National Hurricane Kathe ,
× RELATED 22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு