×

எலி பிஸ்கட் சாப்பிட்ட மூதாட்டி பரிதாப சாவு

புதுச்சேரி, நவ. 28:   முதலியார்பேட்டையில் மாத்திரை என நினைத்து எலி பிஸ்கட்டை சாப்பிட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார். புதுவை, முதலியார்பேட்டை, பட்டம்மாள் நகர், 3வது குறுக்குத் தெருவைச்  சேர்ந்தவர் இருசப்பன். இவரது தாயார் விருத்தாம்பாள் (75). மூதாட்டியான இவர்  ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு ஜிப்மர் மற்றும் கதிர்காமம் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். அவரை தினமும் மாத்திரை சாப்பிட டாக்டர்கள்  அறிவுறுத்தியிருந்த நிலையில்,  சம்பவத்தன்று இரவு மாத்திரை என நினைத்து  வீட்டில் இருந்த எலி பிஸ்கட்டை அவர் தின்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு மயக்கம் ஏற்படவே, தனது மகனிடம் கூறியுள்ளார். அவர்கள்  அவர் சாப்பிட்ட கவரை எடுத்து பார்த்தபோது அது எலி பிஸ்கட் என தெரியவரவே  அவரை உடனே அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  விருதாம்பாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Eli Biscuit Eat Muttler ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...