×

மொரப்பூர் பகுதியில் காராமணி விளைச்சல் பாதிப்பு

அரூர், நவ.27:  மொரப்பூர் பகுதியில் பருவம் தவறி ெபய்த மழையால், காராமணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் ேவதனை தெரிவித்துள்ளனர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் புன்செய் பயிராக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், காராமணியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள காராமணி, செடியிலேயே முளைக்க தொடங்கியுள்ளது. தேவையான நேரத்தில் மழை பெய்யாததால், போதுமான தண்ணீர் கிடைக்காமல் காய்கள் சிறுத்து காணப்படுகிறது. மேலும் அறுவடை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், காய் நிறம் மாறி செடியிலேயே மீண்டும் முளைத்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெறும் காய் மட்டுமே உள்ளது. உள்ளே விதைகள் இல்லை. இதனால், காராமணி செடிகள் மாட்டு தீவனத்திற்கு தான் பயன்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : region ,Morpore ,
× RELATED தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக...