×

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கஜா நிவாரண பொருட்கள்

கடலூர், நவ. 27: புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நிவாரண பொருட்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர்   அன்புச்செல்வன் அனுப்பி வைத்தார். கஜா புயலால் பாதிப்புக்குள்ளான தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சுமார் ரூ.11 லட்சத்து 71 ஆயிரத்து 376 மதிப்பிலான பெட்ஷீட், பிஸ்ெகட், பிரட், மெழுகுவர்த்தி, தலையணை, பால் பவுடர், கொசுவர்த்தி சுருள், ரவை, டார்ச் லைட் பேட்டரியுடன், துண்டுகள், தண்ணீர் பாட்டில், புடவைகள், சேமியா, பால் என மொத்தம் 28,703 பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்திலிருந்து இதுவரை மொத்தம் 1,20,872 பொருட்கள் ரூ.43 லட்சத்து 22 ஆயிரத்து 270 மதிப்பில் பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நிவாரண பொருட்கள் வழங்கிய தனியார் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும்  மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கடலூர் சார் ஆட்சியர் சரயு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா, அலுவலக மேலாளர் (பொது) பாலசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur district ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...