×

தங்கம் மருத்துவமனை நிறுவனர் இல்ல திருமண வரவேற்பு விழா

நாமக்கல், நவ.23: நாமக்கல்லில், தங்கம் மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவரும், தங்கம் மருத்துமனை நிறுவனருமான டாக்டர் குழந்தைவேல்-மல்லிகா ஆகியோரது மகன் டாக்டர் கார்த்திக் ராஜமாணிக்கத்திற்கும், ஈரோடு டாக்டர் ஞானசேகரன்-பத்மினி ஆகியோரது மகள் டாக்டர் மகாலட்சுமி ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு விழா, நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள தோப்பூர் கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை டாக்டர் குழந்தைவேல், மல்லிகா, ராஜரத்தினம், கலைவாணி, சதீஷ் நாகமணிக்கம், மீனா, சந்தீப் ராஜா சிதம்பரம், காஞ்சனா, சரவண ராஜமாணிக்கம், சுபா, மணி(எ) லட்சுமிபதி, கமலம், ராஜகோபால், சம்பூர்ணம், தயாளன், சுலோச்சனா, ஞானசேகரன், பத்மினி, ஞானசம்பந்தன், சிலம்புலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் ஏராளமனோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் டிரினிடி கல்வி நிறுவனங்கள், நாமக்கல் தமிழ்ச்சங்கம், நாமக்கல் கம்பன் கழகம், நாமக்கல் நகைச்சுவை மன்றம், ஆன்மீக வேள்வி, தங்கம் எக்ஸ்ட்ராக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரவேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தங்கம் மருத்துவமனை, தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் செய்திருந்தது.

Tags : Gold Hospital Founder ,wedding reception ceremony ,
× RELATED திமுக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி...