×

நீடாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதியில் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த கோரிக்கை

நீடாபமங்கலம், நவ.23: நீடாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதியில் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஜா புயலால்  நீடாமங்கலம், கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் உள்ள மக்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர். நகர பகுதிகளில் ஓரளவு, குடிநீர் மின்சாரம்  வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளான பூவனூர், கானூர், காரிச்சாங்குடி,  தேவங்குடி, மேலாளவந்தசேரி, அரிச்சந்திரபுரம், சித்திரையூர், பூந்தாளங்குடி, வடபாதிமங்கலம்  உள்ளிட்ட  300க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கஜா புயலால் மின்கம்பங்கள்  சாய்ந்ததால் மின்சாரம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், மின்சாரம் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் செய்து வருகின்றனர். அதுவும்  கிராமப்புறம் என்பதால் கொசுக்கடியால் மக்கள் தொல்லைகள் அனுபவிப்பதோடு நோய் அபாயத்தில் உள்ளனர். சுகாதார  துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனவைரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : spread ,area ,Kidanallur ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது