செந்துறை,நவ.23; அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகரில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் செயல்பட்டது, அப்போது அண்ணா நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செந்துறை தபால் நிலைய அலுவலர் சசிகலா அலுவலக உதவியாளர் கோகுலிடம் ஜெனரேட்டரை இயக்க கூறினார். பின் மீண்டும் மின்சாரம் வந்துவிடவே அங்கிருந்த ஊழியர் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரை நிறுத்தியுள்ளார். கோகுல், நிறுத்தும் பட்டனை அழுத்தியும் ஜெனரேட்டர் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஜெனரேட்டரில் கரும்புகையுடன் தீ பிடிக்க துவங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை தீயணைப்பு வீரர்கள் பவர் கேபிளை துண்டித்து தீயினை மேலும் பரவாமல் தடுத்து அனைத்தனர். மேலும், ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்சார கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜெனரேட்டர் கட்டிடத்திற்கு வெளியே இருந்ததால் அசம்பாவிதம் ஏற்பட வில்லை என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.