×

தாழ்வான பகுதிகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி,  நவ. 23: புதுவையில் 2 நாட்களாக மழை நீடிக்கும் நிலையில்  ரெட்டியார்பாளையத்தில் தாழ்வான பகுதிகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார். புதுவையில் கஜா புயல் ஓய்ந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் கனமழை  பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் கட்டுமானம், மீன்பிடி தொழில்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதுவையில் ஒரே நாளில் 6 செமீ மழை  பதிவானது. கனமழையால் பாதிக்கப்பட்ட  தாழ்வான பகுதிகளை கவர்னர் கிரண்பேடி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.  ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், மறைமலை நகர் மற்றும் பூமியான்பேட்டை  உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய நீரை பார்வையிட்ட கவர்னர், அவற்றை உடனடியாக  அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வாய்க்கால்களில் மழைநீர்  தடையின்றி ஓடுகிறதா? என்பதையும் ஆய்வு செய்த கவர்னர், ஆங்காங்கே உள்ள  அடைப்புகளை உடனே சரிசெய்ய அறிவுறுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  ராஜ்நிவாஸ் சென்றடைந்தார். காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை கவர்னர் கிரண்பேடி இன்னும் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Governor ,Lowlands ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...