×

ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, நவ.22: தர்மபுரியில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி சிஐடியூ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், கவுரவன், பொன்.ரத்தினம், ஆனந்தன், பழனி, பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சேகர், புகழேந்தி, இளவேனில், யோகராஜ், காமராஜ், செல்வம், செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, முதுகலை ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புறநூலகர்கள், வன பாதுகாவலர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பிரசாரம் ெசய்வது. மேலும் டிசம்பர் 4ம் தேதி முதல், காலவரையற்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : Jacotto - Geo Consulting Meeting ,
× RELATED ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம்