×

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சுவர் விளம்பரங்களில் கட்சியினர் மும்முரம்


தர்மபுரி, நவ.22: இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்புக்கு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.  தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்களிடம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளிடையே சுவர் விளம்பரம் எழுதுவதில், போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஏமகுட்டியூர், எட்டிமரத்துப்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற கட்சிகளும் சுவர் விளம்பரம் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, 18 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செல்ல 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. 89வது நாளில்கூட மேல் முறையீட்டுக்கு போகலாம். இதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், இடைத்தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு போட்டி போட்டுக்கொண்டு சுவர் விளம்பரம் எழுதும் பணியில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்,’ என்றனர்

Tags : party ,
× RELATED தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த...