×

ராகி, அவரை, துவரை பயிர்களை காப்பாற்ற தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் 40 யானைகளையும் விரட்ட வேண்டும்

ஓசூர், நவ.22: ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு விரட்டப்பட்ட 40 யானைகள், நான்கு நாட்களுக்கு முன் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் வந்தன. தற்போது ஓசூர் பகுதியில் ராகி அறுவடை நடந்து வருகிறது. இதனால் யானைகள் சானமாவு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இந்த காட்டு யானைகள் அனைத்தும் காவேரி ஆற்றங்கரையோரம் உள்ள கர்நாடக-தமிழக எல்லை  வனப்பகுதியிலிருந்து வந்தவையாகும். காட்டு யானைகள் அனைத்தும் ராகி அறுவடை என்பதை தெரிந்து வைத்தாற்ேபால் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த யானைகள் ஓசூர் வனப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த வருடமும் 40 யானைகள் வந்து சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், ஒமதேப்பள்ளி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அவரை, துவரை, நெல் உள்ளிட்ட பயிர்கள் மிகவும் சேதப்படுத்தியிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  கடந்த ஒரு வாரமாக ஒற்றை யானை ஒன்று சானமாவு, பீர்ஜேப்பள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுற்றி வருகிறது. நேற்று முன்திம் இரவு காவலுக்கு சென்றிருந்த ஆழியாளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரையும், நேற்றிரவு ஒமதேப்பள்ளியை சேர்ந்த பத்ரி (33) என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகறது. இதனால் விவசாயிகள் ஒற்றை யானையாலும், 40 யானைகளாலும் கடும் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக அனைத்து யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

Tags : Dhenkanikkottai ,forest ,
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!