×

ராபி பருவ பயிர் காப்பீட்டுக்கு ஜன.15 கடைசி ஏக்கருக்கான பிரிமியத் தொகை அறிவிப்பு

விருதுநகர், நவ. 22: ராபி பருவ பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய, விருதுநகர் மாவட்டத்தில் 747 தொகுப்பு வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் மூலம் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் மாவட்டத்தில் நியு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பொதுச்சேவை மையங்கள் மூலம் வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கள் மூலம் பதிவு செய்யலாம். ராபி பருவ பயிரான கோடை நெல் பயிருக்கு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.308 பதிவு செய்ய 15.2.19 கடைசி நாள். மக்காச்சோளம், பயறு வகைகள் (உளுந்து, துவரை, பாசிப்பயறு, தட்டைப்பயறு), நிலக்கடலை, சோளம், கம்பு, எள், சூரியகாந்தி பயிர்களுக்கு ஏக்கருக்கு பிரிமியம் முறையே ரூ.327, ரூ.215, ரூ.293, ரூ.149, ரூ.138, ரூ.119, ரூ.172 பதிவு செய்ய 15.1.19 கடைசியாகும்.

பருத்தி, வெங்காயம், மிளகாய் மற்றும் வாழைப் பயிர்களுக்கு பிரிமியம் ஏக்கருக்கு முறையே ரூ.1040, 1293, ரூ.1030, ரூ.1854 பதிவு செய்ய 28.2.19 கடைசியாகும்.
விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் அடங்கல், வங்கி பாஸ் புக் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவை இணைத்து கட்டணத்தொகையை செலுத்தி, ரசீதுகளை பொதுச்சோவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்