×

பென்சிலில் காந்தி படம் வரையும் போட்டி

திண்டுக்கல், நவ. 21:  தேசத்தந்தை மகாத்மாகாந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அஞ்சல்துறை சார்பில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காந்தியின் உருவபடத்தை பென்சிலால் வரைந்து அனுப்ப வேண்டும். வயது வரம்பு இல்லை. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். படத்தை வரும் 30ம் தேதிக்குள் உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று திண்டுக்கல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Gandhi ,film drawing ,Penza ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...