×

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, நவ.20:  சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது.  செல்லியம்பட்டி பள்ளியில் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா, துணைத்தலைவர் சாந்தி, துணை செயலாளர் மணியம்மா முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் வாலண்டினா, மாநில செயலாளர் சசிகலா கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் தமயந்தி, அமுதப்பிரியா, கண்ணம்மாள், சுதா, ரோகினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பாக்கியலெட்சுமி நன்றி கூறினார். 

Tags : demonstration ,Mathi Sangam ,
× RELATED ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்