×

கஜா புயல் தாக்கத்தால் கோவிலூர் சிவன் கோயிலில் கோபுர கலசம் கீழே விழுந்தது பக்தர்கள் கவலை

முத்துப்பேட்டை, நவ .20: திருவாரூர், முத்துப்பேட்டை அருகே கோவிலூரில் பாடல்பெற்ற மந்திரபுரீஸ்வர சுவாமி கோயில் உள்ளது.பழமையான இக்கோயிலில் மாங்கனி வினாயகர்,சுரதேவர் மற்றும் ராமருக்கு ஈஸ்வரன் மந்திர உபதேசம் செய்யும் அரிய சிற்ப வடிவங்கள் உள்ளன.
இக்கோயிலில் வருடாந்திர திருவிழாக்கள் மற்றும் பிரதோஷம் வழிபாடுகள் நடைபெறும்.முக்கிய நாட்களில் நடைபெறும் விசேஷங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து  தரிசனம் செய்வர். கோயிலுக்கு வருவோர் கொடிமர வினாயகர் நந்தி பகவானை வழிபட்ட பின்னரே கோயிலுக்குள் சென்று மூலவர் மற்றும் அம்பிகையை வணங்கி திரும்புவர்.

இந்நிலையில் முத்துப்பேட்டையை கஜா புயலால் கோவிலூர் கோயில் வாசலில் இருந்த கொடிமரம்,அம்மன் கோயில் தகரசெட்,மற்றும் கோயில் கோபுர கலசம் ஆகியனவற்றை புயல் தாக்கி முறித்து போட்டது. இதனால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர் .கலசங்களோடு கோயில் கொடிமரமும் விழுந்துள்ளது கவலையளிக்கிறது என பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags : Devotees ,tower ,storm ,Ghazh ,Kovilur Shiva ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...