×

சூரசம்ஹார விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம்

திருத்துறைப்பூண்டி, நவ.16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
பின்னர் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு புஷ்ப அலங்காரத்தில் வள்ளி தெய்வாணையுடன் முருகன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், ஓய்வுபெற்ற மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருதம், டாக்டர் தேவி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Churasamahara ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...