×

செங்குணம் கிராமத்தில் வெறிநாய் அட்டகாசம் 10 பேரை கடித்து குதறியது

பெரம்பலூர்,நவ.15: பெரம்பலூர் அருகே செங்குணம்  கிராமத்தில் வெறிநாய் அட்டகாசம் அதிகரித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோரை நாய் கடித்ததால் பீதி  ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் அருகேவுள்ள  செங்குணம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் செங்குணம் கிராமத்தின் பல்வேறு இடங்களில் சாலையோரமாக சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என  10 பேரை வெறிநாய்கடித்து காயப்படுத்தியுள்ளது. இதில்   செங்குணம அங்கன்வாடி அமைப்பாளர் வசந்தா(56), ஓய்வுபெற்ற தலையாரி சிற்றம்பலம்(75), அண்ணாநகர் சிவகாமி(67), நடுவீதியைச் சேர்ந்த ராணி(46), போஸ்ட்ஆபிஸ் தெருவைச்சேர்ந்த சித்ரா (34). மதுரவீரன் கோவில்தெரு  செல்வி(41),  பள்ளி மாணவன் அஜய்(11), மாணவி சஞ்சிதா(7) ஆகியோரை  வெறிநாய் ஒன்று விரட்டிவிரட்டிக் கடித்ததில் பலத்த காயமடைந்தனர்.

வெறிநாய் கடிபட்ட இவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று வெறிநாய் கடிக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டனர். வெறி நாய் கடித்தவர்களை  மாவட்ட என்சிடி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விவேகானந்தன் நேரில்  சந்தித்து  வெறி நாய்க்கடிக்கு எடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து  கேட்டறிந்தார். அப்போது, பெரம்பலூர் மாவட்ட இளநிலை பூச்சியல்வல்லுநர்  கிருஷ்ணமூர்த்தி, அம்மாபாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன்,  எசனை சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், செங்குணம் குமார்அய்யாவு ஆகியோர்  உடனிருந்தனர்.

Tags : village ,Stankan ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!