×

குமரி கிழக்கு மாவட்ட அதிமுகவில் பூத் கமிட்டிக்கு 20 பேர் நியமனம் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், நவ.15:   குமரி கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசோகன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நகர செயலாளர் சந்துரு வரவேற்றார்.  கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  மேலும் வரும் 18ம் தேதி தேர்தல் பணிகள் தொடர்பாக நாகர்கோவில் பெருமாள் திருமண்டத்தில் நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தலா 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் குமரி மாவட்டத்துக்கு தேர்தல் பணியாற்றிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள சாத்தூர் தொகுதியில் தீவிரமாக பணியாற்றி அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிறுபான்மைப்பிரிவு மாநில தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், அசோக்குமார், வீராசாமி, அணி செயலாளர்கள் ஜெய சீலன், சுகுமாரன், பொன் சுந்தரநாத், வக்கீல் சுந்தரம், கன்னியாகுமரி பேரூர் செயலாளர் வினிஸ்டன், நிர்வாகிகள் இ.என். சங்கர், ரபீக், ரயிலடி மாதவன், கார்மல்நகர் தனீஷ், வக்கீல் ஜெயகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : appointment ,Booth Committee ,Kumaon East District High Court ,Executive Committee ,
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...