×

கிருஷ்ணகிரி அருகே புதூர் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, நவ.14:  கிருஷ்ணகிரி அருகே சின்னமுத்தூர் கம்பளிகான் தெருவில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. இந்த விழாவினையொட்டி கடந்த 4ம் தேதி முகூர்த்தக் கால்கோள் விழா மற்றும் முளைப்பாரி இடுதல், கங்கனம் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூணர்ஹுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து, திருக்காவிரியில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், வேதபாராயணம், துவார பூஜ, மண்டப அர்ச்சனை, வேதிகை அர்ச்சனை, அஷ்ட திவ்ய ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு புதிய சிலைகளுக்கு யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.

இன்று (14ம் தேதி) காலை இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, உபசாரம் பூஜை, மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து யாத்ராதானம் கடம் புறப்பாடு நிகழ்ச்சி மற்றும் புதூர் மாரியம்மனுக்கு காலையில் மகா கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், தகதரிசனம், தசதானம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கம்பளிகான் தெரு இளைஞர்கள் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags : festival ,Kumbabishekha ,Puthur Mariamman temple ,Krishnagiri ,
× RELATED அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா