×

எஸ்பியிடம் கோரிக்கை மனு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளின் வரைபடங்களிலும் பெயர் சேர்த்து வெளியிட கோரிக்கை

அரியலூர்,நவ.14: அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,  ஜெயங்கொண்டம்,  செந்துறை,  ஆண்டிமடம் ஆகிய 4 தாலுக்காவிலும் வருவாய் துறையின் சர்வே துறையினரிடம்  , கிராம நிர்வாக அதிகாரிகளிடம்  அனைத்து   நிலங்கள், ஏரிகள்,  குளங்கள்,  குட்டைகள், ஆறுகள்,  ஒடைகள்,  சாலைகளின் ஆகியவைகளின் சர்வே எண்ணுடன்,  வரைபடங்கள் அதன் 4 பக்கம் சுற்று அளவுகள்,   அதன் பரப்புகள் கொண்ட வரைபடம் சுதந்திரத்திற்கு முன்பு  தயாரிக்கப்பட்டவை  பயன்பட்டில் உள்ளன.
 இந்த வரைபடங்களில் ஏரிகள்,  குளங்கள்,  ஒடைகள் ஆறுகளை குறிக்கும் வரைபடத்தின் நடுவில் முழுவதும்  கோடுகள் வரையபட்டு அந்த அந்த  ஏரிகளின் பெயர் எழுதப்பட்டு இருக்கும்.   இந்த வரைபடங்கள் (திவிஙி)  அனைத்தையும் ஸ்கேன் செய்து  டிஜிட்டல் ஆக்கும் பணிகள் 10   ஆண்டுகள் நடை பெற்று வந்தது. அதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.  அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமத்தின் நிலங்கள், ஏரிகள்,  குளம், குட்டைகள், ஒடைகள்,  என  அந்த டிஜிட்டல்  வரைபடங்கள் அனைத்தும் தற்போது வருவாய்துறை இணையத்தில் வெளியிட்டு உள்ளது.

பொதுமக்கள் கம்யூட்டர்,  செல்போனிலும் உடன் பார்க்க வசதி செய்யப்பட்டுவுள்ளது. இதில் பாதி ஏரிகள்,  குளங்கள்,  ஒடைகளில்  வரைபடங்களில் நீர்நிலைகள் என்பதை குறிக்கும் வகையில்  மார்க் செய்யும் வகையில் பரப்பு முழுவதும் கோடுகள் நிலநிறத்தின் கலரில் வரையபட்டு ஏரிகளின் பெயரும் குறிக்கப்பட்டு வெளியிடபட்டு உள்ளது. மீதி  உள்ள நூற்றுகணக்கான ஏரிகளில்,  குளங்களில் ஒடைகளின்   வரை படங்களில் வெறும் படம் மட்டும் வெளியிட்டு பெயர்களும் குறிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களிடம் அது நீர் நிலையா? என அடையாளம் காண முடியாமல் அவதிப்படுகின்றனர். நீர் நிலை   என்ன பெயர் கொண்டது என தெரியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போல் உள்ளது. ஆகையால் அரியலூர் மாவட்ட நிர்வாகம்  இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள அனைத்து நீர்நிலைகளின்  வரை படத்தில் (திவிஙி)   ஊதா வண்ணம்  கோடுகளை வரைந்து ஏரிகளின் பெயர்களை இணைத்து  வெளியிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : watersheds ,SP ,
× RELATED போக்குவரத்து பாதிப்பு...