×

மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு 2 நாளில் ரூ.15.5 கோடி `சரக்கு’ விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.2.31 கோடி அதிகம்

மதுரை, நவ. 8: மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2 நாட்களில் ரூ.15.5 கோடிக்கு `சரக்கு’ விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2 கோடியே 31 லட்சம் அதிகமாகும்.மதுரை மாவட்டத்தில் நகரில் (வடக்கு) 110 கடைகளும், புறநகரில் (தெற்கு) 125 கடைகளும் சேர்த்து மொத்தம் 235 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 5ம் தேதியும், தீபாவளி தினமான நேற்று முன்தினமும் `சரக்கு’ விற்பனை களை கட்டியது. கடைகள் முன்பு நீண்ட `கியூ’வில் நின்று குடிமகன்கள் சரக்கை வாங்கிச் சென்றனர்.

கடந்த 5ம் தேதி நகரில் (வடக்கு) ரூ.3 கோடியே 95 லட்சத்து 35 ஆயிரத்து 425ம், புறநகரில் (தெற்கு) ரூ.4 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரத்து 600ம் சேர்த்து மொத்தம் ரூ.8 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரத்து 25க்கு விற்பனையானது.இதேபோல் கடந்த 6ம் தேதி (தீபாவளி அன்று) நகரில் ரூ.3 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரமும், புறநகரில் ரூ.4 ேகாடியே 24 லட்சத்து 71 ஆயிரத்து 939ம் சேர்த்து மொத்தம் ரூ. 7 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 939க்கு விற்பனையானது.அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.15 கோடியே 57 லட்சத்து 15 ஆயிரத்து 964க்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டு ரூ.13 கோடியே 19 லட்சத்திற்கு விற்பனையானது. அதாவது இவ்வாண்டு கடந்த ஆண்டை விட ரூ.2 ேகாடியே 31 லட்சத்திற்கு சரக்கு அதிகமாக விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : festival ,Deepavali ,district ,
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...