×

10 யூனிட் திருட்டு மணல் பறிமுதல் பிடிஓவிடம் ஒப்படைப்பு தேவிகாபுரத்தில்

சேத்துப்பட்டு, நவ.2: தேவிகாபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டுயிருந்த 10 யூனிட் திருட்டு மணலை தாசில்தார் பறிமுதல் செய்து பிடிஓவிடம் ஒப்படைத்தார்.சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம், ஓதலவாடி, தெள்ளூர், ராந்தம், ஊத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து செய்யாற்றிற்கு இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் மணல் திருடப்படுகிறது. கடந்த சில மாதங்களாக எஸ்பி சிபி.சக்கரவர்த்தி, கலெக்டர் கந்தசாமி ஆகியோரின் உத்திரவின்படி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் மணல் திருட்டு குறைந்தது.இந்நிலையில், மணலை மாட்டுவண்டி, டிராக்டரில் சேகரித்து அதிக விலைக்கு விற்க மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பதுக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.தேவிகாபுரம்-தச்சாம்பாடி எல்லையில் உள்ள மலையடிவாரத்தில் பொதுமக்கள் கண்களுக்கு படாமல் 10 யூனிட் அளவிற்கு திருட்டு மணலை அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ பதுக்கி வைத்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் இதனை கண்டு சேத்துப்பட்டு தாசில்தார் தமிழ்மணிக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தாசில்தார் தமிழ்மணி, வருவாய் ஆய்வாளர்கள் ஜீவா, பிரியா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இந்த திருட்டு மணலை பறிமுதல் சேத்துப்பட்டு பிடிஓ குமரேசனிடம் தாசில்தார் தமிழ்மணி ஒப்படைத்தார்.பின்னர், இந்த திருட்டு மணலை தச்சாம்பாடி ஊராட்சி பாரத பிரதமர் திட்டத்தில் வீடுகட்டும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் பூவராகவனிடம் பிடிஓ குமரேசன் வழங்கினார்.

Tags : Devikapuram ,
× RELATED பழைய பிரியாணியை சூடு செய்து புதிய...