×

அடிப்படை வசதிகள் இல்லாத மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

நெய்வேலி, நவ. 2: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-27ல் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பதிவுகள், லைசென்ஸ் புதுப்பித்தல், புதிய நடத்துனர் உரிமம் வழங்குதல், பெயர் மாற்றம் செய்தல், சரக்கு வாகனத்துக்கு வரி செலுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் நெய்வேலி நகர பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு வரக்கூடிய பெண்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லாமல் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும் அலுவலகத்தின் வெளியே நிழற்குடை இல்லாததால் வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.  அவர்கள் அமருவதற்கு இடவசதியும் ஏற்படுத்தி தரப்படாமல் உள்ளது. இங்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தும் நிர்வாகிகள் மற்றும் என்எல்சி ஊழியர்கள் சிலர் புரோக்கர் ஆக செயல்படுகின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் உரிய வழிமுறைகளை ஏற்படுத்தி தராமல் அவர்களை அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.
 இதனால் அவர்கள் வேறு வழியின்றி புரோக்கர்களை நாட வேண்டியதுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் புரோக்கர்கள் மக்களிடன் கூடுதல் பணம் வசூலிக்கின்றனர். இதேபோல் வாகனங்கள் சம்பந்தமாக பணம் கட்ட வேண்டும் என்றால் புரோக்கர் மூலமாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் புரோக்கர்களின் ஆதிக்கம் இங்கு மேலோங்கி உள்ளது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டுவேப்பூர், நவ. 2: வேப்பூர் அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேப்பூர் அடுத்த அடரி டாஸ்மாக் கடை அடரி- பொயனப்பாடி செல்லும் சாலையையொட்டி உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையின் விற்பனையாளர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
 இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்து 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்றனர்.இது குறித்து தகவலறிந்து வந்த சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Motor Vehicle Inspectorate Office ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...