×

பேட்டியின்போது, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். ஓய்வுபெற்ற மில் ஊழியர் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி,  நவ. 1:  புதுவை, உருளையன்பேட்டை, சங்கோதையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர்  ராஜலிங்கம் என்ற சக்கரபாணி (68). ஓய்வுபெற்ற ஏஎப்டி மில் ஊழியரான இவர்,  உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவரை உறவினர்கள்  திட்டியதாக கூறப்படுகிறது.இதில் விரக்தியடைந்த அவர், தனது வீட்டின்  முதல்மாடியில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து  அவரது மகன் கோபால் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று ராஜலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.புதுவையில் 7 நாளாக நீடித்த பிஆர்டிசி ஸ்டிரைக் வாபஸ்புதுச்சேரி, நவ. 1: புதுவையில் பிஆர்டிசி ஊழியர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் 7 நாட்களாக நீடித்த வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) ஊழியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் உள்ளிட்ட 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த 25ம்தேதி முதல் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் தொடங்கினர். அரசு 2 மாத சம்பளத்தை உடனே வழங்க அரசு ஒப்புதல் அளித்தும் அதை ஊழியர்கள் ஏற்காததால் வேலை நிறுத்தம் நேற்று 7வது நாளாக நீடித்தது. இதனால் பிஆர்டிசி பஸ்கள் அனைத்தும் பணிமனையிலே ஓய்வெடுத்தன.தொடர் வேலை நிறுத்தம் காரணமாக பிஆர்டிசி நிர்வாகத்துக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனிடையே பிஆர்டிசி ஊழியர்களுக்கு ரூ.2.64 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் ேநற்று மதியம் பிஆர்டிசி மேலாண் இயக்குனர் குமார், பொதுமேலாளர் ஏழுமலை ஆகியோரை சந்தித்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அக்டோபர் மாத சம்பளத்தையும்உடனே வழங்க உறுதியளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும், அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்றும் தொடர் வேலை நிறுத்தத்தை பிஆர்டிசி தொழிற்சங்கத்தினர் வாபஸ் பெற்றனர்.அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பியதால் மதியம் 12 மணி முதல் பிஆர்டிசி பஸ்கள், மினி பஸ்கள் அனைத்தும் ஓடத் தொடங்கின. வெளியூர்களுக்கான பஸ்களும் வழக்கம்போல் இயங்கின. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags : interview ,Vishwanathan ,Salim ,executives ,mill employee ,Death ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு