×

ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் பணப்பாக்கம்-புதுப்பேட்டை சாலை

பண்ருட்டி, அக். 31: பண்ருட்டி அருகே பணப்பாக்கம்-புதுப்பேட்டை இடையே உள்ள தார்சாலை 3 மைல் தூரம் கொண்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை போடப்பட்டது. தரமில்லாமல் போடப்பட்ட இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக பனப்பாக்கம், வரிஞ்சபாக்கம், பூண்டி, குச்சிப்பாளையம், கட்டமுத்துபாளையம் ஆகிய ஊர்களுக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விளையும் விவசாய பொருட்களையும் இந்த சாலை வழியாக டிராக்டர் மற்றும் வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர்.

சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வருவதில் சிரமம் உள்ளது. மேலும் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்ல பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை உடனடியாக சீரமைத்து தருமாறு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road ,The New Road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி