×

கூத்தாநல்லூரில் டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

நீடாமங்கலம், அக்.30: டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டப்பிரிவின் கீழ் சம்மந்தப்பட்ட  வீடுகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் அண்ணாமலை(எ)புவனேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூத்தாநல்லூர் நகரில் 24 வார்டுகள் உள்ளது. வார்டுகளில் உள்ள மக்களிடம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசுவை ஒழித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு வீடுகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கான ஆதாரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள்,

அலுவலாகள் ஈடுபட்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் தேங்காய் சரடு, டயர், பீங்கான் கப், பிரிஜ் உள்ளிட்ட நல்ல தண்ணீரில் உருவாகும் டெங்கு கொசு தொடர்பாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்யும்போது டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டப்பிரிவின் கீழ் சம்மந்தப்பட்ட வீடுகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது டெங்கு தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும்  வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : shop ,owners ,home ,
× RELATED செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்