×

செல்லியம்பட்டியில் 125 விவசாயிகளுக்கு ₹52.58 லட்சம் கடனுதவி

தர்மபுரி, அக்.30: தர்மபுரி அருகே செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில், 125 விவசாயிகளுக்கு ₹52.58 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது. விழாவில் 125 விவசாயிகளுக்கு ₹52.58 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் ேக.பி.அன்பழகன் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். அதனை தொடர்ந்து ₹20 லட்சம் மதிப்பில், சிகரலஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நவீன கட்டடம் மற்றும் ₹20 லட்சத்தில் வண்ணாத்திப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நவீன கட்டடம் ஆகியவற்றை, பூமி பூஜை செய்து பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில், தர்மபுரி சப் கலெக்டர் சிவன்அருள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அன்பழகன், முன்னாள் நகரமன்ற தலைவர் வெற்றிவேல், துணை பதிவாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் செந்தில்குமார், பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா