×

திருவெண்காட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

சீர்காழி,அக்.26: சீர்காழி அருகே திருவெண்காடு நெய்தவாசல் செல்லும் சாலையில் சிங்காரன்வாய்க்கால் மதகு அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த நடந்த சாலை மறியலால் திருவெண்காடு நெய்தவாசல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : store ,Tahmakt Tashmak ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!