×

மாவட்ட தடகள போட்டியில் அரூர் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

அரூர், அக்.26: மாவட்ட அளவிலான தடகள போட்டியில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தர்மபுரி மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மையதானத்தில் நடந்தது. இதில், 45 பள்ளிகளை சேர்ந்த 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் அரூர் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சீனியர் பிரிவு கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் ரகமத்துல்லா முதலிடமும், 10ம் வகுப்பு மாணவன் பிரவின் 2ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.

இதன் மூலம் இந்த மாணவர்கள் மண்டல அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். சீனியர் தொடர் ஓட்டத்தில் மாணவர் கவுதம், சுகவனேஸ், ரகமத்துல்லா, பிரசாந்த், ஜூனியர் பிரிவில் தீபன், இம்ரான், கதிரவன், பேரரசு ஆகியோர் 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி துறை ஆசிரியர்கள்  அசோகன், பழனிதுரை, முருகேசன் ஆகியோரை, அரூர் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேலு, மாவட்ட உடற்கல்வி  ஆய்வாளர் முத்துகுமார்  ஆகியோர் பாராட்டினர்.

Tags : District Athletic Competition ,Arar Government School ,
× RELATED மாவட்ட தடகள போட்டி: பரமக்குடி பள்ளி அசத்தல்