×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கார் டிரைவர் கைது

சென்னை, அக். 26: வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் கவிதா (38), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 17 வயது மகள், கடந்த 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியில் கார் ஓட்டி வரும் தர்மலிங்கம் என்பவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து, சிறுமி தனது தாய் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த கவிதா சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்த கார் டிரைவர் தர்மலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும், தர்மலிங்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கார் டிரைவர் தர்மலிங்கத்தை போக்சோ சட்டத்தில் ேநற்று கைது செய்தனர்.

Tags : car driver ,Paxo ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை...