×

சேத்தூர் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

ராஜபாளையம், அக. 25: சேத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ராஜபாளையம் அருகே சேத்தூரில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை ஒழிப்பதற்கு தேவையான பணிகளை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிககு சென்று தலைமையாசிரியர் தண்டாயுதபாணியிடம் மாணவர்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணவுர்கள் ஏற்படுத்தியுள்ளதை கேட்டறிந்து மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கும், பன்றி காய்ச்சல் ஏற்படாமல் இருக்கவும் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்று பேசினார். மேலும் மாணவர்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஏற்படாமல் இருப்பதற்கு சிறப்பு சிசிச்சையளிக்க வட்டார மருத்துமனையிலிருந்து குழு ஒன்றையும் அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் சேத்தூர் செயலாளர் சிங்கம்புலிஅண்ணாவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Tags : swine flu awareness camp ,school students ,Chettur ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்