×

பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக 47வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.23:  பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக சார்பில், அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ராஜேந்திரன், ஜெகநாதன், பெரியக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் சரவணன் வரவேற்றார். உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் கோவிந்தராஜ், டி.ஆர்.அன்பழகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் குப்புசாமி, நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய அண்ணா தொழிற்சங்க தலைவர் தென்னரசு நன்றி கூறினார்.

Tags : AIADMK ,ceremony ,Poppitippatti ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...