×

கறம்பக்குடி ஒன்றியத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கறம்பக்குடி, அக்.23: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீத்தான்விடு–்தி, கரு வடக்குத்தெரு, கண்ணியான்கொல்லை, இன்னான்விடு–்தி, திருமணஞ்சேரி, பந்துவாக்கோட்டை, வெட்டன்விடு–்தி, மேல பொன்னன்விடு–்தி, கரு தெற்குத்தெரு, கரு கீழத்தெரு, ராங்கியன்விடு–்தி, கட்டுவான்பிறை, எம்.தெற்குத்தெரு அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி உட்பட மொத்தம் 34 பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளர் காலிப்பணி இடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பாக பெண்கள் இன சுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள்  5ம் தேர்ச்சி பெறாதவர்களும் 20 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதேபோல் பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்தால் போதும். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  மேலும் பணி இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும். எனவே தகுதி உள்ள பெண்கள் அனைவரும் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தகுந்த சான்றுகளை இணைத்து கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 31ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர் நலதேவன் தெரிவித்துள்ளார்.

Tags : Nutritional Assistant Assistant ,
× RELATED புதுக்கோட்டையில் நாளை வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்