×

கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

சென்னை, அக். 23: கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 28ம் ேததி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில்  தண்ணீர் குறைவாக திறக்கப்பட்ட போதிலும், படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 722 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது, கண்டலேறு  அணையில் 1424 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி தமிழக எல்லைக்கு 596 கன அடி வீதமே தண்ணீர் தமிழக எல்லைக்கு வருவதாக கூறப்படுகிறது.  இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : border ,Kandaleru Dam ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது