×

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

நத்தம், அக். 16: நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதியும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அக்னிசிறகுகள் அறக்கட்டளை நிர்வாகி முருகானந்தம் தலைமை தாங்க, தலைமையாசிரியை சரஸ்வதி, ஆசிரியை மகாலட்சுமி, தொல்லியல்துறை அலுவலர் முருகன் முன்னிலை வகித்தனர். சமூகஆர்வலர் ராஜா வரவேற்றார்.

அப்துல்கலாம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அரிமா சங்க நிர்வாகி நாகரானவ் கேடயம், சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர் வீரராஜன் நன்றி கூறினார்.

Tags : Abdulkalam ,Birthday Celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...