×

டான்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் சாதனை

தர்மபுரி, அக்.12:  சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில், டான்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சேலம் பெரியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி, ஏவிஎஸ் கல்லூரியில் நடந்தது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 60 கல்லூரிகளிலிருந்து, 200 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். நாக்-அவுட் முறையில் நடந்த இப்போட்டியில், தர்மபுரி டான்போஸ்கோ கல்லூரி முதலாமாண்டு கணிதத்துறை மாணவர் விக்னேஷ் முதலிடம் மற்றும் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், மாணவர் சிலம்பரசன் 2ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லூரி இல்லத்தந்தை ராஜ்குமார் மெர்வின், முதல்வர் சிலுவைமுத்து, துணை முதல்வர் ராபர்ட் ரமேஷ்பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags : Donbass ,
× RELATED முடிவுக்கு வந்தது மரியுபோல் சண்டை...