×

டீசல் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அரூர், அக்.12:  டீசல் விலை உயர்வை கண்டித்து, அரூரில் பொக்லைன் உரிமையாளர்கள் ஒரு நாள் ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் 100க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து ஏறி வரும் டீசல் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும், பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தினர், அரூரில் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘தற்போது டீசல் லிட்டர் ₹81 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொக்லைன் வேலைக்காக ஒரு மணி நேரத்திற்கு ₹800 கூலி வாங்கப்பட்டது. டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை ஏற்றம், ஜிஎஸ்டி வரி, வெல்டிங் கட்டணம், வாகனம் இயக்கும் தொழிலாளி கட்டணம் என அனைத்தும் அதிகரித்துள்ளது. இதனால் பொக்லைன் உரிமையாளர்கள் தொடர்ந்து கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். எனவே, டீசல் விலையை குறைக்க கோரி, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் நஷ்டத்தை ஓரளவிற்கு குறைக்கும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு ₹1000 கட்டணம் வாங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர். இதில் தலைவர் தங்கராசு, பொருளாளர் சிவகுமார், செயலாளர் ஜெயகுமார் மற்றும் உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : fight ,owners ,Bogline Owners ,
× RELATED இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம்...