×

மகளை திருமணம் செய்து வைக்கும்படி ஆயுதப்படை காவலர் டார்ச்சர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, அக். 12: வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையை சேர்ந்தவர் கல்பனா (34), தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள்  மஞ்சுவும் (18) இதே கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் கல்பனா வேலைக்கு செல்லவில்லை. மஞ்சு வேலை முடிந்து மாலை வீடு  திரும்பினார். அப்போது, வீட்டில் கல்பனா தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து வாலாஜா போலீசில் கல்பனா மகள் மஞ்சு புகார் செய்தார். அதில், காவேரிப்பாக்கம் அடுத்த பெரிய கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்,  எனது தாய்க்கும் திருமணமானது. 2 மகள்கள் உள்ளோம். எனது தாய், தந்தைக்கும் 5  ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து  வந்தனர். இதற்கிடையில் திருமணம் ஆகாத சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றும் குமரேசனுக்கும் எனது  தாய்க்கும்  நெருங்கிய தொடர்பு  ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எங்களை வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை  பகுதியில் தனிக்குடித்தனம் வைத்தார். அப்போது என்னை, தனக்கு  திருமணம் செய்து வைக்கும்படி போலீஸ்காரர் கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வந்தார்.  

அதற்கு எனது தாய் ‘உனக்கு மகள் முறையுள்ள என் மகளை  எப்படி திருமணம் செய்வது’ என மறுத்தார்.  இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் குமரேசன் செல்போனில் எனது தாயை தொடர்பு கொண்டு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் எனது தாய்  நேற்று (நேற்று முன்தினம்) ேவலைக்கு செல்லவில்லை. நான் மட்டும் வேலைக்கு சென்றேன். எனது தங்கையும் பள்ளிக்கு சென்றிருந்தாள். மாலையில்  வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, எனது தாய் புடவையால் தூக்கு போட்டது தெரியவந்தது.  போலீஸ்காரரான குமரேசன் அடிக்கடி  டார்ச்சர் செய்ததால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  தெரிவித்துள்ளார். அதன்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,Armed Forces Tharcur ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...