×

நொச்சிக்குட்டையில் பயன்பாட்டிற்கு வராத பல்நோக்கு கட்டடம்

கடத்தூர், அக்.11: கடத்தூர் அருகே நொச்சிக்குட்டையில், பயன்பாட்டிற்கு வராத பல்நோக்கு கட்டடத்தை திறக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே நொச்சிக்குட்டையில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தன்னிறைவு திட்டதின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு, ரூ3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 2ஆண்டுகளாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நொச்சிக்குட்டையில் ரேஷன் கடை இல்லாததால் சிரமப்பட்டு வந்தோம். ரேஷன் கடை கட்டக்கோரி,

அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அப்ேபாது அதிகாரிகள் ரேஷன் கடை கட்ட நிலம் இல்லை என கூறினர். அதன் ேபரில், இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பட்டா நிலத்தில் ரேஷன் கடை கட்ட இடம் கொடுத்ததால், ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள், 1கி.மீ தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்நோக்கு கட்டடத்தை ேரஷன் கடையாக திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : Multipurpose ,
× RELATED நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு...