×

சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை

சென்னிமலை.அக்.5:  ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறந்த ஊராகும்.  இதனால் சென்னிமலையில் தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், அவரது பிறந்த  நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
 இந்நிலையில், கடந்த ஆண்டு தியாகி குமரன் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர், அமைச்சர், எம்பி, எம்.எல்.ஏக்கள் என பலரும் வந்து அவரது படத்திற்கு மாலை மட்டும் அணிவித்து புறப்பட்டு சென்றனர்.
 ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் முறைப்படி தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். ஆனால்  மாவட்ட ஆட்சியர் முதலில் வந்த போதிலும் அமைச்சர் வருகைக்காக  காத்திருந்தார். பின்னர் குமரன் பிறந்த இல்லத்திற்கு கால்நடை துறை அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, சட்டமன்ற  உறுப்பினர்கள் காங்கயம் தனியரசு, பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம்,  மொடக்குறிச்சி சிவசுப்பிரமணியம், ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம், ஈரோடு  தென்னரசு ஆகியோர் காலை 11 மணிக்கு  வந்து புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து விட்டு தியாகி குமரன்  திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   தொடர்ந்து தியாகி குமரன் வாரிசுதார்களான அண்ணாத்துரை,  கருணாமூர்த்தி, சுயராஜ்ஜியம் ஆகியோருக்கு அமைச்சர்  சால்வை அணிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 115வது பிறந்தநாள் விழா நடந்தது.
முன்னதாக நேற்று காலை குமரனின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திருப்பூர் குமரனின் சிலைக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர்கள் கலைமணி, கதிர்வேல், தி.மு.க சார்பில் இளைஞரணி செயலாளர் பிரகாஷ், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில நிர்வாகி வடிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு,மற்றும் கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், ம.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி கணேசமூர்த்தி, தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் விஜயகுமார், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாலை திருப்பூர் கவிநிலவன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.

Tags : Tirunur Kumaran Memorial ,Chennimalai ,
× RELATED ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த...