×

துறையூரில் இலவச இருதய பரிசோதனை முகாம்

துறையூர், அக்.10:   துறையூரில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் தீவிர இருதய நோய் சிகிச்சை நிபுணர் ராமச்சந்திரன், அலர்ஜி ஆஸ்துமா, காசநோய் சிகிச்சை நிபுணர் சரவணக்குமார், மூளை நரம்பியல்  மற்றும் முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சை நிபுணர் சையது அலி, மூளை நரம்பியல் நிபுணர் ராஜராஜன் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மார்பக வலி,  மூச்சு திணறல்,  தொடர் இருமல், தும்மல், தூக்கமின்மை, கழுத்து, முதுகெலும்பு ஜவ்வு விலகுதல், மூளை அழுத்தம், கண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனையை செய்தனர். முகாமில் 200 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags : Free Cardiology Testing Camp ,Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி