×

கடலூர் சி.கே. கான்பிடன்ட் மழலையர் பள்ளியில் விதைப்பந்து நடவு

கடலூர், அக். 10: கடலூர் சி.கே. கான்பிடன்ட் மழலையர் பள்ளியில் பசுமைப் புரட்சியை வலியுறுத்தும் வகையில் விதைப்பந்து நடவு திட்டம் மற்றும் முதியோர்களை போற்றும் வகையில் முதியோர்கள் உடன் ஒருநாள் கொண்டாட்டம் என முப்பெரும் விழா நடந்தது. கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி என அனைத்து பகுதிகளிலும் உள்ள சி.கே. கான்பிடன்ட் கிட்ஸ் மழலையர் பள்ளியில் விழா நடந்தது. விழாவில் பள்ளியின் சிறார்கள் பசுமை புரட்சியை மேம்படுத்தும் வகையில் ஆங்காங்கே விதைப்பந்து விசிறி மரங்கள் வளர்வதற்கு வழி வகுத்தனர். மேலும் முதியோர் தினத்தை போற்றுகின்ற வகைகள் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து, அவர்களுடன் விளையாடி உணவு வழங்கி மகிழ்ந்தனர். விழாவில் கடலூர் சிறார்கள் அமைப்பின் சண்முகம் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு விதைப்பந்து நடவு பணியில் ஈடுபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் மண்டலத்தலைவர் சுஜி ஏற்பாடு செய்திருந்தார். மேலும் பள்ளியில் உள்ள மழலையர்களை கொண்டு உலக சாதனை படைத்திடும் வகையில் விரைவில் பசுமைப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்போவதாக தெரிவித்தார். தற்போது பள்ளியில் சேர்க்கப்படும் மலர்களும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்