×

லஞ்ச புகார் எதிரொலி!: 410 பணி நியமனங்கள் குறித்து துறை ரீதியிலான விசாரணையை தொடங்கியது ஆவின் நிர்வாகம்..!!

சென்னை: லஞ்ச புகார் எதிரொலியாக இந்த ஆண்டு நடைபெற்ற 410 பணி நியமனங்கள் குறித்து ஆவின் நிர்வாகம் விசாரணையை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பணியாற்றுவதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 410 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். தொழிற்சாலை உதவியாளர் முதல் மேலாளர் வரை உள்ள இந்த பதவிகளுக்கான தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், கல்வி தகுதி இல்லாதவர்களுக்கும் பணி நியமனம் வழங்ப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து 410 பணி நியமனங்கள் குறித்து ஆவின் நிர்வாகம் துறை ரீதியிலான விசாரணையை தொடங்கியுள்ளது. விதிகளை கடைபிடித்து நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருவதாக ஆவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும் 636 பதவிகளுக்கான வெளியிடப்பட்ட 2 ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய கந்தசாமி, அதற்காக பெறப்பட்ட விண்ணப்ப கட்டணம் திரும்பி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். …

The post லஞ்ச புகார் எதிரொலி!: 410 பணி நியமனங்கள் குறித்து துறை ரீதியிலான விசாரணையை தொடங்கியது ஆவின் நிர்வாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Aain administration ,CHENNAI ,Aavin ,Dinakaran ,
× RELATED பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில்...