×

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3,232 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பை போன்று கருப்பு பூஞ்சை நோய்க்கும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 232 பேர் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் பாதிப்படைந்தவர்களில் 387 பேர் குணமடைந்துள்ளனர். 1600-க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 262 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த நோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை மற்றும் போதுமான அளவுக்கு மருந்து இருப்பு உள்ளது. இதனால் யாரும் ஆதங்கப்படவோ, பதற்றமடையாவோ வேண்டிய அவசியமில்லை.மேலும் கொரோனா தடுப்பூசியும் போதுமான அளவு இருப்பு உள்ளது. தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை. ஒன்றிய அரசிடம் கொரோனா தடுப்பூசி கூடுதலாக அனுப்பி வைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். …

The post கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3,232 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Health Minister ,Sutagar ,Bengaluru ,Corona ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...