×

போளூர் மார்க்கெட் கமிட்டியில் 2 மாதமாக ₹1.50 கோடி நிலுவை தொகை தராமல் இழுத்தடிப்பு-எம்எல்ஏவிடம் விவசாயிகள் புகார்

போளூர் :  திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 20 மார்க்கெட் கமிட்டிகளில் சேத்துப்பட்டுக்கு அடுத்தபடியாக போளூர் மார்க்கெட் கமிட்டி நெல் கொள்முதல் செய்வதில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் இங்கு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக விவசாயிகள் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று போளூர் மார்க்கெட் கமிட்டியில் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது,  அங்கிருந்த விவசாயிகள் எம்எல்ஏவிடம் கூறியதாவது: இங்கு  2500 மூட்டை  வரைதான் இருப்பு வைக்க கிடங்கு வசதி உள்ளது.   ஆனால் மழை காலங்களில் வியாபாரிகள் நெல் மூட்டைகள் அங்கு  அடுக்கி வைக்கர்படுவதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனையும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இங்கு புதியதாக நெல் கிடங்கு கட்டித்தர வேண்டும். மேலும் நெல்கொள்முதல் செய்யப்பட்ட பணத்தை 48 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் 2 மாதமாக ₹1.5 கோடி நிலுவை தொகை  வைத்துள்ளார்கள். இந்த பணத்தை உடனடியாக பெற்று  தராவிட்டால் மோசடி நடக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கு குறிப்பிட்ட சில வியாபாரிகள் மட்டுமே வருவதால் சின்டிகேட்  வைப்பதால் போதிய விலை கிடைப்பதில்லை. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என சராமாரியாக  குற்றம் சாட்டினர். இதுகுறித்து மார்கெட் கமிட்டி கண்காணிப்பாளர்  ஹரிணி கூறுகையில், பணம் கட்டாமல் மூட்டைகளை அனுப்ப கூடாது  என விதிமுறை உள்ளது. ஆனால் சில  சமயங்களில்  நம்பிக்கையின் அடிப்படையில் வெளியே அனுப்பப்படுகிறது. நெல்கொள்முதல்  செய்த நிலுவை தொகை தற்போது ₹30 லட்சம் இருப்பு உள்ளது. மீதி ₹1.21 கோடி மிக விரைவில் வழங்கப்பட்டு விடும்’ என்றார்….

The post போளூர் மார்க்கெட் கமிட்டியில் 2 மாதமாக ₹1.50 கோடி நிலுவை தொகை தராமல் இழுத்தடிப்பு-எம்எல்ஏவிடம் விவசாயிகள் புகார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Polur Market Committee ,Polur ,Tiruvannamalai district ,Sethupat ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...