×

மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் சென்னை தெற்கு பகுதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்..!

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்அவர்களின் ஆலோசனைப்படி சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம். மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு ஏ செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு ஏ செந்தில்பாலாஜி அவர்கள், சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் மின்விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் மற்றும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினகள் திரு. ஆ. தயாநிதி மாறன், டாக்டர் வி. கலாநிதி, திரு. க. செல்வம்,  சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. தாயகம்கவி, திரு. ஆர்.டி. சேகர், திரு. ஜே.ஜே. எபிநேசர், திரு. ஜோசப் சாமுவேல், திரு. சுதர்சனம், திரு. க. சுந்தர், திரு.ளு.சு. ராஜா, திரு. ஊ.ஏ.ஆ.ஞ எழிலரசன், திரு. நு. கருணநிதி, ளு. திரு. அரவிந் ரமேஷ், திரு. செல்வபெருந்தகை, திரு.து.ஆ.ழ. ஹலீசன்மவுலான, ளு. பாலாஜி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்லீகனி இ.ஆ.ப, மேலாண்மை இயக்குநர், இயக்குநர்கள், வடக்கு மற்றும் தெற்கு மண்டல அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் எந்த வித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளாததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. அதனை உடனே சரி செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள அலுவலர்களைக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின்படி மரக்கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல், சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்தல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்,மின் கம்ப தாங்கும் கம்பிகள் பழுதடைந்த மின் பெட்டிகள் ஆகியவற்றை சரிசெய்தல், இன்சுலேட்டர்கள் மாற்றுதல், துணை மின் நிலையங்கள் பராமரித்தல், பழைய மின் கம்பிகளை மாற்றுதல் மற்றும் மின்மாற்றிகளைப் பராமரித்தல் போன்ற பராமரிப்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 19 முதல் 28 முடிய 10 நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பேசுகையில்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் நம்முடைய துறைக்கு இட்ட கட்டளை தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற வேண்டும் மேலும் மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி மின் இணைப்புக்காக காத்திருக்கும் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும் என்ற உத்தரவுகளை வழங்கியிருக்கிறார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடந்து முடித்திருக்கின்ற சட்ட மன்ற கூட்டத்தொடரில் மேதகு ஆளுநர் உரையில் கடந்த கால ஆட்சியில் இடம் பெற்ற தவறான நிர்வாகத்தால் மின் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் ஆய்வு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆகையால் நம்முடைய துறையின் உயர் அலுவலக பெருமக்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற நிருவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைப்பாட்டால் என்ன என்ன இழப்புகளை நாம் சந்தித்தோம் எதனால் 1 இலட்சத்து 59 ஆயிரம் கோடி மின் வாரியத்திற்கு இழப்புகள் ஏற்பட்டது.  இதனால் ஒரு வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி மின் வாரியம் வட்டியாக செலுத்துகிறது. எதனால் 2010 ம் ஆண்டு நாம் உற்பத்தி செய்தது இப்போது 2021 ம் ஆண்டு குறைந்திருக்கிறது. நிறுவுகள் அதிகரித்தப்போதும் சொந்த உற்பத்தி குறைந்திருக்கிறது.  நம் மின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய கூடிய அளவிற்கு நம்முடைய மின் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை 2006 முதல் -2011 வரையிலான காலகட்டத்தில டாக்டர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பத்தாண்டு ஆகியும் ஏன் செயல்படுத்தப்படவில்லை, ஏன் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து அந்தப் பணிகளை முடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையை ஆய்வு செய்து வரக்கூடிய காலங்களில் முழுமையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் மின் மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவதோடு, மின் இணைப்புக்காக காத்திருப்போர் எவரும் நீண்டகாலம் காத்திருக்காமல் உடனடியாக மின் இணைப்பு வழங்குகின்ற மாநிலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆளுகின்ற மாநிலம் தமிழகமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் சிறப்பாக பணிகளை முன் எடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தப்போதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நோய்த் தொற்றை ஒரே மாதத்தில் குறைத்து, இன்று இந்த நோய் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒரு மாதத்தில் நோய்த் தொற்றை விரட்டியவர்கள் கடந்த ஆட்சியில் 9 மாதமாக பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளாதவற்றை ஏன் 10 நாட்களில் செய்து முடிக்க  முடியாது.  நம்மிடம் அந்த அளவிற்கு திறமைகள் இல்லையா, நம்மிடம் அனுபவங்கள் இல்லையா,  நம்மிடம் இருக்க கூடிய அதிகாரிகள் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் இல்லையா நம்முடைய பணிகளை நாம் கவனிக்க வேண்டும் இரண்டு பேர் இரண்டு மணிக்கு செய்யக்கூடிய வேலைகளை 10 பேர் பத்து நாள் செய்ததாக சொல்வார்கள் ஆனால் நம்முடைய பணிகளை 98 சதவீதம் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்துகிறார்கள், சிலரின் மெத்தன போக்கினால் ஒட்டுமொத்த மின் வாரியத்திற்கும், அரசுக்கும்  அவப்பெயர் ஏற்படும் சூழல் அமைந்துவிடக் கூடாது.  எனவே நம்முடைய வாரியத்தின் சார்பாக அனைத்து அதிகாரிகளும் அலுவலக பெருமக்களும் மிக சிறப்பாக செயல்பட்டு மாண்புமிகு முதலமைச்சருக்கு நற்பெயரை ஈட்டித் தரவேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்பதை மனதில் வைப்போம். 24 மணி நேரமும் நாம் செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். எல்லாரும் தூங்குகிற நேரத்தில் தான் நமக்கு பணிகள் அதிகமாக வரும், இரவு நேரங்கள் நமக்கு வருகிறது என்று சொன்னால் மின் வெட்டோ அல்லது மின் தடையால் அந்த பணிகள் வருகிறது என்று அர்த்தம்.  மின் தடை இல்லையென்றால் இரவு நேரங்களில் நாமும் ஓய்வு எடுத்து கொள்ளலாம். கடந்த கால ஆட்சியில் 9 மாதங்கள் பராமரிப்பு பணிகள் ஏன் செய்யவில்லை என்று சட்டமன்றத்தில் நாம் கேட்டோம் கடைசி வரை எதிர்க்கட்சி தலைவர் பதில் சொல்லவில்லை.  கடந்த காலங்களில் நிர்வகித்தவர்கள் பதில் சொல்லவில்லை ஏன் என்றால் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. அதைப் போன்று ஏற்கனவே இலவச மின் இணைப்பிற்கு விவசாயிகள் விண்ணப்பித்தது, தாட்கோ திட்டம், சுய நிதி திட்டம், போன்றத் திட்டங்களில் விண்ணப்பித்த 4 இலட்சத்து  23 ஆயிரம் நபர்கள் மின் இணைப்பு கோரி காத்திருக்கின்றார்கள். இந்த சூழலில் கடந்த ஆட்சியாளர்கள் மின் மிகை மாநிலம் என்று தங்களை பெருமைப்படுத்தி சட்டமன்றத்திலும் வெளியிலும் பேசி வந்தார்கள். நம்முடைய வாரியத்தின் அலுவலகத்திற்கு  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் வருகை தந்து, தமிழகமெங்கும் இருக்க கூடிய மின் நுகர்வோர்க்கான சேவை மையத்தை (மின்னகம்) பொற்கரங்கலால் தொடங்கி வைத்து இலட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்த கூடிய வாய்ப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார். இது வரை வந்திருக்ககூடிய மொத்தம் 40,500 அழைப்புகள் வந்திருக்கின்றன அதில் 31,000 அழைப்புகளை நம்முடை அலுவலக பெருமக்கள் சரிசெய்து இருக்கிறார்கள்.  வீட்டில் இருந்த படி ஒரே அழைப்பால் புகார்களை தெரிவித்து சரிசெய்யக்கூடிய வாய்ப்பை நம்முடைய முதலமைச்சர் ஏற்படுத்தி தந்திருக்கிறார். எஞ்சி இருக்க கூடிய 9500 பணிகளும் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன, அதையும் ஓர் இரு நாட்களில் சரிசெய்து அந்த 100 சதவீதம் சரிசெய்து இருக்கின்ற நிலையை நாம் எட்ட வேண்டும் இப்படி தொடர்ச்சியாக நாம் எடுக்க கூடிய பணிகள் நம்முடைய அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கும் நற்பெயர் ஈட்டித் தரக்கூடிய வகையில் மக்கள் இடத்தில் நன்மதிப்பை பெறக்கூடிய வகையில்  நம்முடைய செயல்பாடுகள் அமையவேண்டும்.  சில இடங்களில் பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரக்கூடிய நேரங்களில் அங்கு இருக்கும் அதிகாரிகள் அவர்கள் இடத்தில் நடந்துக்கொள்ளக்கூடிய அந்த செயல்கள் ஒட்டுமொத்த வாரியத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டு விடுகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து மிக சிறப்பாக செயல்படக்கூடிய நிலையை நாம் எட்ட வேண்டும். 10 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட பணிகளை  மிகச்சிறப்பாக செய்து முடித்திருக்கின்ற வாரியத்தின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அலுவலக பெருமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  நம்முடைய வாரியத்திற்கு ஆக மூத்த அதிகாரியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நியமித்திருக்கிறார்கள் மிக சிறப்பாக பணியாற்றக்கூடிய உயர் அலுவலர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டு வரக்கூடிய காலங்களில் நாம் தொலைக்நோக்கு பார்வையோடு நம்முடைய வாரியத்தை செயல்படுத்த வேண்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கிறார்….

The post மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் சென்னை தெற்கு பகுதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Laboratory for Southern Regions ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Sh.R. ,G.K. ,Stalins' ,Northern ,Chennai Southern Regions ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...