அரூர், ஜூன் 3: தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். இம்முகாமில் 40க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு ரத்தம் சேகரித்ததுடன் இலவச பொது மருத்துவ முகாமிலும் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். இருதய அறுவை சிகிச்சை, தண்டுவட நரம்பு அழுத்தம், மகளிர் நல மருத்துவம், எலும்பு, பல் மருத்தும், இடுப்பு முழங்கால் மூட்டு சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.










