×

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல்தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் எழுந்ததால் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை , கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து, கல்லூரியானது ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகளின் செமஸ்டர் தேர்வுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் முறையில் தேர்வு வைக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததாக தெரிகிறது.

ஆன்லைன் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, இன்று கல்லூரி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. எங்கு, எப்படி தேர்வுகள் நடைபெறும் என்ற முழு விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : College Administration ,Chennai ,Khalashethra College , The college administration has announced that the exams will be held from the 5th of Chennai Kalashetra College
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...