×

மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுச்சேரி: மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி நபர் தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்று  நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

Tags : Puducherry Legislative Assembly , State Eligibility, Puducherry Legislature, Resolution
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...